முதுகுவலி சரியாக தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

முதுகுவலி சரியாக தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்த 82 வயதான ஜாங் என்ற மூதாட்டி முதுகுவலியால் பல நாட்களாக அவதிபட்டு வந்துள்ளார்.

இதற்கு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் குணமாகததால் தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி குணமாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய ஜாங் தனது 8 சிறிய தவளைகளை விழுங்கியுள்ளார். அதன்பின் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பரிசோதனையில் தவளைகளை விழுங்கியதால் ஜாங்க்குக்கு செரிமான பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுண்ணி தொற்றுகள் மற்றும் ரத்தக் கோளாறுகள் ஆகிய நோய்கள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )