ஐந்து பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வு

ஐந்து பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் பதவி உயர்வு

ஐந்து பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

76வது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயுதப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, போரில் காயமடைந்த ஐந்து பிரிகேடியர்களை அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக மேஜர் ஜெனரல் பதவிக்கு அதிகாரப்பூர்வமாக பதவி உயர்த்தியுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்த மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ ஆகியோரால் இந்தப் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )