
கடுமையான மின்னல் எச்சரிக்கைஇன்று இரவு 11 மணி வரை
வானிலை அவதான நிலையம் கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம்பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

