பொன்னி சம்பாவை இறக்குமதி செய்ய தீர்மானம்

பொன்னி சம்பாவை இறக்குமதி செய்ய தீர்மானம்

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) 2025-10-15 முதல் 2025-11-15 வரை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசியை விலக்கு அளிக்க வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாடு ஆகிய அமைச்சர்கள் கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு நிலவும் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )