இன்று முதல்  GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம்

இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தலாம்

தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியுமெனவும் குறித்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )