
இன்று சில பகுதிகளில் 75 mm மழை
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று சில மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிகிக்கப்பட்டுள்ளது.
மேல் ற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல முறை மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

