மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் நீடித்துள்ளது. 

இந்த எச்சரிக்கை நேற்று(25) மாலை 4:00 மணி முதல் இன்று (26) மாலை 4:00 மணி வரையிலான காலப்பகுதிக்கு அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கமைய, அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை (Orange) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

காலி மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம்

விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள முதலாம் நிலை (Yellow) அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களும் பிரதேச செயலாளர் பிரிவுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

கொழும்பு மாவட்டம் ,காலி மாவட்டம், களுத்துறை மாவட்டம், கண்டி மாவட்டம், கேகாலை மாவட்டம், குருநாகல் மாவட்டம், மாத்தளை மாவட்டம், மாத்தறை மாவட்டம் , நுவரெலியா மாவட்டம் ,இரத்தினபுரி மாவட்டம் 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )