முச்சக்கர வண்டியைக் கழுவுவதற்கு காதலனுடன் களனி ஆற்றுக்கு சென்ற காதலி நீரில் மூழ்கி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியைக் கழுவுவதற்கு காதலனுடன் களனி ஆற்றுக்கு சென்ற காதலி நீரில் மூழ்கி உயிரிழப்பு

முச்சக்கர வண்டியைக் கழுவுவதற்காக வாளியில் நீர் எடுக்க முற்பட்ட இளம் பெண் ஒருவர் களனி ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் 25 வயது காதலனும் அவரைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார்,

இதன்போது அவர்களுடன் வந்த குழுவினர் இருவரையும் காப்பாற்ற முற்பட்ட போதிலும் இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வெல்லம்பிட்டிய பிரதச தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கோஹிலவத்த பகுதியில் தங்கள் முச்சக்கர வண்டியை கழுவுவதற்காக நிறுத்தியுள்ளனர்.

களனி ஆற்றுக்கு அருகிலுள்ள வாகனங்கள் கழுவும் இடத்தில் முச்சக்கர வண்டியை கழுவிக் கொண்டிருந்தபோது, ​​வண்டியைக் கழுவ வாளி எடுக்கும்போது இளம் பெண் ஆற்றில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நுவரெலியா பொகவந்தலாவையைச் சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )