
கென்யாவில் நிலச்சரிவு ; 21 பேர் பலி
கென்யா நாட்டின் ரிப்ட் வெலி மாகாணத்தில் உள்ள மரக்வெட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் கிழக்கு மரக்வெட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது
CATEGORIES World News

