
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் “ஜோடி பொருத்தம்” பாடல் வெளியானது
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.
இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கணவன் – மனைவி உறவை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்திலிருந்து “ஜோடி பொருத்தம்” என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை லட்சுமிகாந்த் பாடியுள்ளார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.
CATEGORIES Cinema

