போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரிடம் தொடரும் விசாரணைகள்

போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரிடம் தொடரும் விசாரணைகள்

எப்பாவல பகுதியில் உள்ள ஒரு பாடசாலை அதிபர் போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மேற்பார்வையின் கீழ் தொடர்கின்றன .

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் தற்போது அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளனர்.

இந்த சந்தேக நபர்களை நவம்பர் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கியது.

கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்ற அதேவேளை பெஹெலியகொட நகர சபை உறுப்பினரான அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது,

விசாரணைகளின் போது அதிபரின் மனைவி போதைப்பொருள் கடத்தல் குறித்து தனக்குத் தெரியாது என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டபோது அதிபரிடமிருந்து 1 கிலோகிராம் 185 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

குறித்த பாடசாலை அதிபர் தற்போது பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதிபர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவியான திஸ்னா நிரஞ்சலா பேலியகொட நகர சபைக்கான தேசிய மக்கள் சக்தி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )