வரவு செலவுத் திட்டதின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று     இரணடாம் வாசிப்பு மீதான விவாததிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

வரவு செலவுத் திட்டதின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று இரணடாம் வாசிப்பு மீதான விவாததிற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு

வரவு செலவுத் திட்டதின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடைபெறவுள்ளதுடன் , வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ,2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் இரணடாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது..

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்..

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தாம் ஆதரவு வழங்கியதாக அதன் தலைவர் மனோ கணேசன் மற்றும் உபதலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி மார் சபையில் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )