நாமல் – சுமந்திரன் சந்திப்பு                                                21 ஆம் திகதி பேரணி தொடர்பாக சுமந்திரனுக்கு நாமல் விளக்கம்

நாமல் – சுமந்திரன் சந்திப்பு 21 ஆம் திகதி பேரணி தொடர்பாக சுமந்திரனுக்கு நாமல் விளக்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கெதிராக 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படும் பேரணி தொடர்பாக தெளிவூட்ட்டுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று காலை நடந்ததாகவும், இதன்போது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது அவசியம் என்று எம்.ஏ. சுமந்திரன், கூறியுள்ளார்.

உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்த அரசியலமைப்பின் படி இந்தத் தேர்தல்களை நடத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பேரணி குறித்து முக்கிய எதிர்க்கட்சியாகவுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு தெரிவிப்பது அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )