
பைசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கடந்த மாதம் 17-ந்திகதி வெளியான ‘பைசன்’ படம் பலதரப்பு மக்களையும் கவர்ந்து வசூலையும் குவித்து வருகிறது.
‘பைசன்’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் 21ம் திகதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பைசன் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

