
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகமேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை, ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் சட்டமா அதிபர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு மனு மூலம் விடுத்த கோரிக்கை நேற்று பரிசீலிக்கப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணை விரைவாக முடிக்கப்படும் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, தங்கள் கட்சிக்காரருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குவதற்கான கோரிக்கையை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்தனர்.

