
நாவலபிட்டியில் மண்மேடு சரிந்து விழுந்து மூன்று மாத குழந்தை உட்பட இரண்டு பெண்கள் உயிரிழப்பு
நாவலப்பிட்டி, பழைய ரயில்வே வீதியில் இன்று
ஒரு வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாத குழந்தை என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்தது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க பிரதேசவாசிகள் மற்றும் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அது பலனளிக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் உடல்கள் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 50 குடும்பங்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் ரம்யா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

