
இரு துண்டுகளாக பிளவடைந்த வட்டுவாகல் பாலம்
பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

