
ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் பகத் பாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ‘புஷ்பா 2’ திரைப்படம் வரும் 2026 ஜனவரி 16ம் திகதி ஜப்பான் நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

