
புறக்கோட்டையில் தேனீர் கடை கதிரையில் அமர்ந்தவாறு ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு ,புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிட பகுதியின் தேனீர் கடை ஒன்றுக்கு அருகில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 04 மணியளவில் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் பஸ் ஒன்றில் வருகை தந்ததாகவும், அவர் சுகயீனமுற்ற நிலையில் புறக்கோட்டை பிரதான பஸ்தரிப்பிடத்தில் பஸ் நடத்துனர் ஒருவர் இறக்கிவிட்டு சென்றதாகவும் , அதன் பின்னர் குறித்த நபர் தடுமாற்றத்துடன் தேனீர் கடை ஒன்றின் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தவாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் தொடர்பான விபரங்களை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
CATEGORIES Sri Lanka

