பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு(டிசம்பர் – பிப்ரவரி வரையான திகதிகள் )

பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு(டிசம்பர் – பிப்ரவரி வரையான திகதிகள் )

இன்று முதல் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டபோதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் ,இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் , கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கான பாடசாலை சீருடைகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் தமக்குரிய பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )