
கொழும்பு-கண்டி பை-பாஸ் வீதி பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்பு பத்மேயிடமிருந்து மற்றொரு தகவல்
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ‘கெஹெல்பத்தர பத்மேயிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட்டு வரும் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்குச் சொந்தமான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, T-56 ஆயுதங்களுக்கான 02 தோட்டாக்கள் மற்றும் T-56 வகையின் 267 வெடிமருந்துகள் இவை என தெரியவந்துள்ளது.
பதமேவின் தகவலுக்கமைய ,எடேரமுல்லவிலிருந்து கொழும்பு-கண்டி வீதிக்குச் செல்லும் பை-பாஸ் வீதியில் தற்காலிகமாக கட்டப்பட்ட ஒரு அறையை சோதனையிட்ட போது இந்த துப்பாக்கி மற்றும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.
இந்த நடவடிக்கை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால், களனி பொலிஸ் சிறப்புப் படை முகாமின் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்தோனேசியாவிலிருந்து இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மேவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினரால் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

