இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தின் போது பேரழிவிற்குப் பிந்தைய மறுசீரமைப்பு, இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகை, இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் பகிரப்பட்ட கடல்சார் நலன்களை பிரதிபலிக்கும் தொடர்ச்சியான மறுசீரமைப்பு உதவிகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

600க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்ட தித்தவா சூறாவளி நவம்பர் 2ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய பிறகு, ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி, அவசரகால நிவாரணப் பொருட்கள் மற்றும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க இந்தியா உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )