பிரபல சிங்கள நடிகர் சதிச்சந்திர எதிரிசிங்க காலமானார்

பிரபல சிங்கள நடிகர் சதிச்சந்திர எதிரிசிங்க காலமானார்

சிரேஷ்ட நடிகரும் நாடக ஆசிரியருமான சதிச்சந்திர எதிரிசிங்க தனது 84காவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் காலமானதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பாடகர் சுனில் எதிரிசிங்கவின் சகோதரரான சதிச்சந்திர எதிரிசிங்க, நடிப்பு மற்றும் இயக்கம் மூலம் கலைத் துறைக்கு அரும்பணியாற்றிய ஒப்பற்ற கலைஞர்.

பெப்ரவரி 10, 1941 அன்று களனியில் பிறந்த பதிகிரிகே சதிச்சந்திர எதிரிசிங்கவின் கலை வாழ்க்கை அரை நூற்றாண்டுக்கும் மேலானது.

1986 ஆம் ஆண்டு காமினி பொன்சேகா இயக்கிய ‘கெட்டி வலிகாயா’ திரைப்படத்தில், சதிச்சந்திர 90 வினாடிகள் சிங்கள இளைஞராக சிறப்பாக நடித்து விருது பெற்றமை அவரது அதீத நடிப்புத் திறமையின் அடையாளமாகும்.

மேலும், சதீஷ்சந்திர ஒரு பௌத்த துறவியாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி , 1987 சரசவி விருதைப் பெற்றார்.

இதேவேளை , சதீஷ்சந்திர தயாரித்து வழங்கிய முதலாவது நாடகமான பகதபஸ்’ 1963 இல் அரங்கேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )