
கொஹுவலை துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபரான இவரை கண்டால் தகவல் தெரிவியுங்கள்அதிகாரி/கொஹுவல பொலிஸ் நிலையம் 071-8591669 அதிகாரி/குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-4146727
கொஹுவலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடுகிறது.
கொஹுவல பொலிஸ் பிரிவின் போதியவத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி காயமடைந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார் ஓவியர் ஒருவரின் உதவியுடன் குறித்த நபரின் உருவப்படத்தை வரைந்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கினர்.
தொலைபேசி எண்கள் –
அதிகாரி/கொஹுவல பொலிஸ் நிலையம் 071-8591669
அதிகாரி/குற்றப் புலனாய்வுப் பிரிவு 071-4146727
CATEGORIES Sri Lanka

