
“FACETS Sri Lanka – 2026” சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி ஆரம்பம்
“FACETS Sri Lanka – 2026” சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி (03) கொழும்பில் உள்ள சினமன் லைப் ஹோட்டலில் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகியது.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) என்பன இணைந்து ஏற்பாடு செய்யும் “FACETS Sri Lanka – 2026” சர்வதேச இரத்தினம் மற்றும் நகை கண்காட்சி இன்று முதல் 05 ஆம் திகதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும்.
CATEGORIES Sri Lanka

