வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் தென்கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த வளிமண்டலக் குழப்பம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

எனவே, ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் நிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, மத்திய, ஊவா, வட-மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )