திரௌபதி 2 படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

திரௌபதி 2 படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

2016 ஆம் ஆண்டு வெளியான ‘பழைய வண்ணாரபேட்டை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி, 2020 ஆம் ஆண்டு ‘திரௌபதி’ திரைப்படத்தை இயக்கினார். சர்ச்சைகளுக்கு உள்ளான அந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது ‘திரௌபதி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளதுடன், ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’ என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்துள்ளார். சரித்திர காலப் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 23ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து ‘தராசுகி ராம்’ என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )