
பசறை – மடுல்சீமை பிரதான வீதியில் திடீரென தாழிறக்கம்
பசறை மடுல்சீமை பிரதான வீதி இரண்டாம் கட்டை பகுதியில் வீதி திடீரென தாழிறங்கியுள்ளது .
இதனால் அப்பகுதியில் பஸ்கள் செல்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இரு பக்கங்களிலும் பயணிக்கின்ற பொது போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் நடை பயணமாக சென்று பஸ்களில் மாறி செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் மடுல்சீமை – பிட்டமாறுவ வீதி, குருவிகல சந்திக்கு அருகில் மண்மேடு, கற்பாறைகள் சரிந்து விழும் அபாய நிலை காரணமாகவும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள வீதியை சீர்செய்வதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

