
ஒ ரோமியோ படத்தின் டீசர் வெளியானது
இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஓ’ ரோமியோ’.
இந்த படம், ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ரோமியோ – ஜூலியட் நாடகத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஹைதர் படத்திற்குப் பிறகு, நடிகர் ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், இந்த திரைப்படத்தில் நானா படேகர், பரிதா ஜலால், அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஓ’ ரோமியோ’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
இப்படம் வரும் பிப்ரவரி 13ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Cinema

