ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறிய விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் விராட் கோலி முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது போட்டியில் 93 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை அடைந்துள்ளார்.

குறித்த போட்டியில் 84 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. விராட் கோலி, 2. டரைல் மிற்செல், 3. றோஹித் ஷர்மா, 4. இப்ராஹிம் ஸட்ரான், 5. ஷுப்மன் கில், 6. பாபர் அஸாம், 7. ஹரி டெக்டர், 8. ஷாய் ஹோப், 9. சரித் அசலங்க, 10. ஷ்ரேயாஸ் ஐயர்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )