தெற்கு கடலில் போதைப்பொருள் கொண்டு சென்ற 2 பலநாள் மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேக நபர்களும் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

தெற்கு கடலில் போதைப்பொருள் கொண்டு சென்ற 2 பலநாள் மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேக நபர்களும் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

தெற்கு கடலில் போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட 2 பலநாள் மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேக நபர்களும் தற்போது டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளைத் தேடுவதற்காக கடற்படை நீண்ட தூர படகுகளைப் பயன்படுத்தி விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

போதைப்பொருள் கொண்டு சென்ற ஒரு படகில் 5 பேரும், மற்றொரு படகில் 6 பேரும் இருந்ததாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் படகுகளில் சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு படகுகளும், 11 சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )