உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய  தங்க விலை

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களின் தகவலின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்து, இதுவரை இல்லாத அளவிலான வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், தங்கத்தின் விலை எதிர்வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருட இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலரை தாண்டும் சாத்தியம் இருப்பதாகவும் அவர்கள் கணிக்கின்றனர்.

இதன் தாக்கமாக, ஏனைய மதிப்புமிக்க உலோகங்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன. அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 1.74 சதவீதத்தால் உயர்ந்து 107.72 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு அவுன்ஸ் பெலேடியம் (Palladium) உலோகத்தின் விலை 0.17 சதவீத உயர்வுடன் 2,013.50 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )