
வாரியபொலையில் கார் மோதி ஒருவர் பலி
வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெனிய – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டிய பகுதியில் கார் ஒன்று மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (29) இடம்பெற்றதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த பாதசாரி, வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துடன் தொடர்புடைய காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

