
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை கனமழை உண்டாகக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் மற்றும் வலுவான காற்று ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


