ஒரு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை பயணப்பொதியில் கொண்டுவந்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை பயணப்பொதியில் கொண்டுவந்த பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த இலங்கையர் எனவும் 01 கிலோ 10 கிராம் குஷ் போதைப்பொருள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது பயணப்பொதிக்குள் போதைப்பொருளை சிறிய பொதிகளாக மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் , விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )