
கெரவலப்பிட்டியில் தீ விபத்து
கெரவலப்பிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இன்று (26) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தப் பகுதியில் குவிந்து கிடந்த குப்பைக் குவியலில் தீ பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ விபத்தால் அப்பகுதியில் புகை மூட்டம் நிலவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

