இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர உதவுங்கள் ; உறவினர்கள் கோரிக்கை

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர உதவுங்கள் ; உறவினர்கள் கோரிக்கை

இயந்திரக் கோளாறு காரணமாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு கொண்டு வரவும், அவர்களின் தொழில் உபகரணங்களை மீண்டும் வழங்கவும் சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்த நிலையில், அவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அது செயலிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆறு நாட்களுக்கு மேலாக குடும்பத்தாருடன் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் வியாழக்கிழமை இந்திய கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, குறித்த இரு மீனவர்களையும் விரைவில் நாட்டுக்கு அழைத்து வருவதற்கும், அவர்களின் வாழ்வாதாரமான படகு மற்றும் மீன்பிடி வலைகளை அவர்களிடமே ஒப்படைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்த கடற்தொழில் அமைச்சர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மீன்பிடி வளத் திணைக்கள அதிகாரிகளுக்கும் மீனவர்களின் உறவினர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )