
நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு
கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நேற்று (07) நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
பின்னர் அவருக்கு அடிப்படை முதலுதவி வழங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டவர் பெந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

