அறிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

அறிவு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.

இந்த நிலையில், சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜய் குமார் நடித்து வருகிறார்.

மகளிர் நாளை முன்னிட்டு இப்படத்திற்கு, ‘அறிவு’ என பெயரிட்டுள்ளதாக போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )