
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்
இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் அந்த விமான நிறுவனம் எதிர்கொண்ட
பாரிய நெருக்கடியே இந்த பதவி விலகலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
விமானிகளைச் சரியாக நிர்வகிக்கத் தவறியதால், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 4,500 விமான சேவைகளை அந்நிறுவனம் ரத்து செய்ய நேரிட்டது. இது இண்டிகோ வரலாற்றிலேயே மிக மோசமான நெருக்கடியாகக் கருதப்படுகிறது.
நிர்வாகச் சீர்கேடு மற்றும் இந்தத் தவறுகள் காரணமாக இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் இண்டிகோ நிறுவனத்திற்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் வான்பரப்புகள் மூடப்பட்டதன் விளைவாக, இந்த ஆண்டில் இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் 13.5% சரிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

