உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

ஆசிய சந்தையில் இன்று (17) முற்பகல் நிலவரப்படி பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8 சதவீதத்தால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3 சதவீதத்தால் உயர்ந்து, ஒரு பீப்பாய் 96.25 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக சில கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, நேற்று (16) எண்ணெய் விலை சற்றளவு வீழ்ச்சியடைந்திருந்தது.

இதற்கிடையில், தமது எரிசக்தி தேவைகளுக்காக வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெயை அதிகமாக நம்பியிருக்கும் ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் ஆசிய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (17) சற்றளவு உயர்வான பெறுமதியுடன் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )