IRIS Dena தாக்குதல் ; “பாரிய பதிலடி வழங்கப்படும்” – ஈரான் எச்சரிக்கை

IRIS Dena தாக்குதல் ; “பாரிய பதிலடி வழங்கப்படும்” – ஈரான் எச்சரிக்கை

இலங்கைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் IRIS Dena கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதிலிருந்த கடற்படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, எதிரித் தரப்பினருக்கு எதிராக பாரிய பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி எச்சரித்துள்ளார்.

சம்பவத்தை கடுமையாகக் கண்டித்த அவர், “எதிரியின் இந்தக் குற்றத்தை நாங்கள் மறக்க மாட்டோம்; எமது தியாகிகளின் இரத்தத்திற்காக நிச்சயமாகப் பழிவாங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எதிரிகள் எதிர்பார்க்காத இடங்களிலிருந்து மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமைகளில் பதற்றத்தை அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )