தடைசெய்யப்பட்ட lunch sheet தயாரிப்பு தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட lunch sheet தயாரிப்பு தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையும் இணைந்து, களுத்துறை மாவட்டம் பண்டாரகம பகுதியில் அமைந்துள்ள தடைசெய்யப்பட்ட lunch sheet தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று அண்மையில் சோதனையிடப்பட்டது.

குறிப்பிட்ட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்த தடைசெய்யப்பட்ட lunch sheet கையிருப்பு, சட்ட நடவடிக்கைக்காக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. மேலும், தேசிய சுறாடல் சட்டத்திற்கு இணங்க, மத்திய சுற்றாடல் அதிகாரசபை அத்தொழிற்சாலையின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )