ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகக் குறைப்பு ; சவுதி அரம்கோ தீர்மானம்

ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகக் குறைப்பு ; சவுதி அரம்கோ தீர்மானம்

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரம்கோ, ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாக ஆசிய வாடிக்கையாளர்களுக்கான தனது கச்சா எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர்ச் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, ஏப்ரல் மாதத்தில் யான்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் ‘அரபு லைட்’ கச்சா எண்ணெயை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக, ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான விநியோகம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என்றும், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தியும் குறையக்கூடும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )