
மீன்பிடி மற்றும் கடல் தொழில்துறைக்கு 24 மணி நேர எரிபொருள் உதவி சேவை அறிமுகம்
மீன்பிடி படகுகள், கடல் உணவு பதப்படுத்துதல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்ளிட்ட தொழில்துறைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, 24 மணிநேரமும் செயல்படும் புதிய உதவித் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம், சம்பந்தப்பட்ட தொழில்துறையினர் தங்களுக்கான எரிபொருள் பிரச்சினைகளை விரைவாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோக சிக்கல்களை உடனடியாக அறிவிக்க விரும்புவோர் 011 4323389 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

