
மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் நாளை முதல் நிறுத்தம்
நாளை (27) முதல் மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) பிற்பகல் 01:30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை அனைத்து சேவைகளும் இயங்காது என ஆட்பதிவுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

