
வாகனத்தை போலிப்பதிவு செய்ய உதவிய குற்றச்சாட்டில் RMV தலைவர் கைது இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கெப்வாகனத்தின் செஸிஸ் இலக்கத்தை (Chassis Number) திருத்தி, அதனைப் போலிப் பதிவு செய்வதற்கு உதவி மற்றும் அனுசரணை வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிப் புலனாய்வுப் பிரிவினரால் கமல் அமரசிங்க அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள அவர், இன்று (மார்ச் 28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

