சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

மார்ச் மாதத்தின் முதல் 25 நாட்களில் மட்டும் 151,693 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாத வருகையாளர்களில், 39,424 பேர் அல்லது 26% பேர் இந்தியர்கள் ஆவர்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 13,967 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 13,272 பேரும், சீனாவிலிருந்து 12,166 பேரும், ஜெர்மனியிலிருந்து 10,523 பேரும் நாட்டிற்கு வருகை தந்தனர்.

ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 229,298 ஆகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )