நேற்று முன்தினம் காணாமல் போன மாணிக்கக்கல் தொழிலதிபர் இன்று சுரங்கக் குழிக்குள் சடலமாக மீட்பு

நேற்று முன்தினம் காணாமல் போன மாணிக்கக்கல் தொழிலதிபர் இன்று சுரங்கக் குழிக்குள் சடலமாக மீட்பு

கஹவத்தை, நீலகம பகுதியில் காணாமல் போன மாணிக்கக்கல் தொழிலதிபர் இன்று (30) சுரங்கக் குழி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கஹவத்தை – நீலகம வீதியில் மாணிக்கக்கல் தொழிலதிபர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர் கஹவத்தை, கட்டங்கே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி பகல் வேளையில், இந்த தொழிலதிபர் கஹவத்தை – நீலகம வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் நீலகம வீதியின் வளைவு ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன், நேற்று (29) அவரது கைபேசியும் அதே வீதிக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )