
போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் பலநாள் மீன்பிடி படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
போதைப்பொருள் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடி படகு திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பல பொதிகளுடன் , கடற்படையினரின் விசேட நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இந்தப் படகு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொன்றுவரப்பட்டது.
படகில் உள்ள பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களின் அளவு மற்றும் வகை குறித்து கடற்படையினரும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து விரிவான சோதனைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் உத்தியோகபூர்வ சோதனைக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

